ஜெயலலிதா சொத்துக்கள் யாருக்கு சொந்தம்.. அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

by எஸ். எம். கணபதி, Dec 27, 2019, 09:13 AM IST

ஜெயலலிதா சொத்துக்கள் யாருக்கு சொந்தம் என்பது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் நேற்று(டிச.26) நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

ஜெயலலிதா சொத்துக்கள் குறித்து கோர்ட்டில் வழக்கு இருப்பதால், அது பற்றி பேச விரும்பவில்லை. அது பற்றி நீதிமன்றம் முடிவு செய்யும். சட்டம் ஒழுங்கில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இனிமேல் அது குறித்து ஸ்டாலின் பேசக் கூடாது. 13 ஆண்டுகள் மத்திய அரசில் இருந்த திமுகவினர், மக்களுக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசிடம் இணக்கமாக இருந்து மாநிலத்திற்கான நிதியை பெறுவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. நல்லாட்சி குறியீட்டில் தமிழகம் முதலிடம் பெற்றிருப்பது புத்தாண்டுக்கு கிடைத்த பரிசு ஆகும்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, ரூ.1694 கோடி செல்லாத நோட்டுகளை மாற்றியிருக்கிறார்கள். சசிகலா, தினகரன் போன்ற மன்னார்குடி மாபியா கும்பல் பணத்தை மாற்றியிருப்பது பற்றி வருமானவரித் துறை செய்தி வந்துள்ளது. எனவே, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது இவர்கள் பின்புலத்தில் இருந்து செய்தது இப்போது தெரியவந்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

You'r reading ஜெயலலிதா சொத்துக்கள் யாருக்கு சொந்தம்.. அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை