திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி வீ்ட்டு வாசல்களில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு கோலம் போட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை பெசன்ட் நகரில், கோலம் போடும் போராட்டத்தில் சில மாணவிகள் ஈடுபட்டனர். அதில் குடியுரிமை சட்டம், என்.பி.ஆருக்கு எதிராக வாசகங்களை எழுதியிருந்தனர். முன் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 6 பெண்களை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் பின்னர் அவர்களை விடுதலை செய்தனர்.
இது குறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதே போல், திமுக எம்.பி. கனிமொழியும் ட்விட்டரில், கோலம் போடுவது தேசவிரோதமா, எஜமானரின் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள் என்று கிண்டலடித்திருந்தார்.
இந்நிலையில், கனிமொழி வீட்டு வாசலிலும், ஸ்டாலின் வீட்டு வாசலிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கோலங்கள் வரையப்பட்டுள்ளது.