கூட்டணி தர்மத்தை மீறி விட்டது திமுக.. காங்கிரஸ் குற்றச்சாட்டு

DMK acting against alliance dharma says congress president k.s.azhagiri.

Jan 11, 2020, 08:58 AM IST

உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீட்டில் திமுகவினர் கூட்டணி தர்மத்தை மீறி விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட்டது. ஆரம்பம் முதலே எந்த ஒப்பந்தமும் இல்லாமல் மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அந்த முயற்சிகளுக்கு மாவட்ட அளவில் திமுகவினரிடம் எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை.


தி.மு.க. தலைமையில் இருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் இதுவரை 2 இடங்கள் மட்டுமே தி.மு.க. தலைமையால் வழங்கப்பட்டுள்ளது.
அதே போல், 27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை. இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




You'r reading கூட்டணி தர்மத்தை மீறி விட்டது திமுக.. காங்கிரஸ் குற்றச்சாட்டு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை