ஸ்டாலின் தலைவர் பதவியை துரைமுருகனுக்கு தருவாரா? ஜெயக்குமார் கேள்வி

by எஸ். எம். கணபதி, Jan 23, 2020, 13:21 PM IST

திமுக தலைவர் பதவியை துரைமுருகனுக்கு ஸ்டாலின் விட்டு தருவாரா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் ஆத்தூரில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசும் போது, திமுகவில் வாரிசு அரசியல் நடப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், அவர் பேசுகையில், அதிமுகவில் நான் மட்டுமே முதலமைச்சர் அல்ல. அத்தனை பேரும் முதலமைச்சர்தான் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, திமுக பொருளாளர் துரைமுருகன், நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது, அதிமுகவில் எல்லோருமே முதலமைச்சர்தான் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அப்படியென்றால் ஏற்கனவே முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவர் முதலமைச்சர் பதவியை விட்டுத் தருவாரா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் இன்று(ஜன.23) பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், திமுகவில் தலைவர் பதவியை பொருளாளர் துரைமுருகனுக்கு ஸ்டாலின் விட்டு கொடுப்பாரா? என்று கேள்வி எழுப்பினார்.


Leave a reply