டிஎன்பிஎஸ்சி ஊழலை கண்டித்து திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம்..

by எஸ். எம். கணபதி, Feb 4, 2020, 12:19 PM IST

டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப்4 தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, உதயநிதி தலைமையில் திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம் நடத்தியது.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்2, குரூப்4 தேர்வுகளில் பல முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் ஆளும்கட்சியினருக்கு தொடர்பு உள்ளது என்றும், அதை மறைக்க முயற்சி நடப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் திமுக கோரி வருகிறது.


இந்த கோரிக்கையை வலியுறுத்தி, இன்று காலையில் டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகம் எதிரே திமுக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கட்சியினர் கலந்து கொண்டனர். அவர்கள் டிஎன்பிஎஸ்சி, அதிமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், சிபிஐ விசாரணை கோரி கோஷம் எழுப்பினர்.READ MORE ABOUT :

Leave a reply