குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுகவின் இயக்கத்தில் கையெழுத்திட்ட மணமக்கள்..

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திருமணம் செய்து கொண்ட மணமக்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்டனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவும், என்.பி.ஆர் தயாரிப்பதை நிறுத்தவும் கோரி கடந்த 2ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று (பிப்5) காலையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளரும், ஜெயராமன் - விமலா தம்பதியரின் மகனுமான ஜெயராஜூக்கும், கருணாகரன்-சகிலா மகள் தமிழரசிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அவரது இல்லத்தில் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது.

ஸ்டாலின் நடத்தி வைத்த இந்த திருமண வைபவத்தில் காஞ்சிபுரம் மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர், மாநில மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், காஞ்சிபுரம் நகர செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருமண விழாவில், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம் குறித்து, மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரிடம் விளக்கி அவர்களிடம் ஸ்டாலின் கையெழுத்து பெற்றார். மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தார் அனைவரும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கையொப்பமிட்டனர்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!