உட்கட்சி தேர்தல் குறித்து விவாதிக்க பிப்.17ல் திமுக மாவட்ட செயலர் கூட்டம்

by எஸ். எம். கணபதி, Feb 10, 2020, 11:16 AM IST

திமுக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் வரும் 17ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவில் உட்கட்சி தேர்தல், வரும் 21ம் தேதி தொடங்கி, தொடர்ச்சியாக நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. திமுகவில் உட்கட்சி தேர்தல் என்றாலே பலத்த போட்டி இருக்கும். ஆள்கடத்தல், கோஷ்டிச் சண்டைகள் எல்லாம் சாதாரணமாக நடக்கும்.

இந்நிலையில், உட்கட்சி தேர்தலை சுமுகமாக நடத்தி முடிப்பது குறித்து விவாதிப்பதற்காக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தை தலைமை கூட்டியுள்ளது. இது குறித்து, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், வரும் 17ம் தேதி மாலை 5 மணிக்கு, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும். அதில் உட்கட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

You'r reading உட்கட்சி தேர்தல் குறித்து விவாதிக்க பிப்.17ல் திமுக மாவட்ட செயலர் கூட்டம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை