ரஜினி நாற்காலி கொள்கைக்கு பாரதிராஜா பாராட்டு..

by எஸ். எம். கணபதி, Mar 13, 2020, 13:39 PM IST

தான் முதல்வர் பதவிக்கு விருப்பப்படவில்லை என்று ரஜினி அளித்த பேட்டியை பாரதிராஜா பாராட்டியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று(மார்ச்12) பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு என்றைக்குமே இருந்ததில்லை. முதல்வராக என்னைக் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. நான் முதலமைச்சர் பதவிக்கு வர மாட்டேன். நான் கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன். முதலமைச்சராக ஒரு இளைஞர் திறமையானவராகப் படித்தவராக, அன்பு, பாசம், தன்மானம் உள்ளவராகத் தேர்ந்தெடுத்து உட்கார வைப்போம். கட்சித் தலைவர் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் போல் ஆட்சியின் தவறுகளைத் தட்டிக் கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

ரஜினியின் பேட்டி குறித்து, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கூறுகையில், ஆட்சிக்குத் தமிழன் தலைசிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கைக்குப் பாராட்டுக்கள். ரஜினியின் அரசியல், கொள்கை அரசியலாக மட்டும் இல்லாமல், தமிழுக்கு நன்மை தரக் கூடியது. ரஜினியின் நாணய அரசியலின் முதல் பக்கத்தில் தமிழனை அரசனாக அமர்த்துவேன் என்பது அரசியலில் நல்விதை. ரஜினி என்ற மனிதம் மக்களுக்கு நன்மை பயக்கும். ரஜினியின் அரசியல் சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்று என்று தெரிவித்தார்.

You'r reading ரஜினி நாற்காலி கொள்கைக்கு பாரதிராஜா பாராட்டு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை