திமுகவில் அடுத்த பொதுச் செயலாளர் யார்? 29ம் தேதி பொதுக்குழு கூடுகிறது.

by எஸ். எம். கணபதி, Mar 15, 2020, 16:06 PM IST

திமுகவின் அடுத்த பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வதற்காகக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திமுக பொதுக்குழுக் கூட்டம், வரும் 29ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் எனது தலைமையில் நடைபெறும். பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இந்த கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் சமீபத்தில் காலமானார். இதையடுத்து, அந்த பதவிக்கு புதியவரைத் தேர்ந்தெடுப்பதற்காக பொதுக் குழு கூடுகிறது. இதில், டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, ஆ.ராசா ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.


Leave a reply