கொரோனா ஊரடங்கு ஏப்.30 வரை நீட்டிப்பு.. முதல்வர் அறிவிப்பு

கொரோனா பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு முதலில் பிறப்பிக்கப்பட்டது. மத்திய அரசு அதை ஏப்ரல் 15ம் தேதி காலை வரை நீட்டித்தது. ஊரடங்கு உத்தரவு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டதால், நோய்த் தொற்று பெரிய அளவில் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கொரோனா நோய்த் தொற்று தொடர்பாக மாநிலங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் கடந்த 11ம் தேதியன்று காணொலி காட்சி மூலமாகப் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமரிடம் எடுத்துரைத்தேன். மேலும், 30-ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டுமெனத் தெரிவித்தேன்.
அந்த ஆய்வுக் கூட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர் குழு மற்றும் பொதுச் சுகாதார வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகளின் படியும், மாநிலத்தில் ஊரடங்கைத் தளர்த்தினால், நோய்த் தொற்று அதிகரிக்கக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டும், 11-ம் தேதியன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படியும், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் படியும், குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 144-ன்படியும், 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.


கொரோனா நோய்த் தொற்றினை தடுக்கும் நோக்கில், பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 144-ன்படியும், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும்.
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் காரணத்தினால், தமிழ்நாட்டில் உள்ள அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு மே மாதத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும்.

கட்டிடத் தொழிலாளர்கள் உள்படப் பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும்.

பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, மே மாதத்துக்காக 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும்.
பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்து, தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலான காலத்தில், பேக்கரிகள் இயங்க தடையில்லை. ஏற்கனவே, உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி பேக்கரிகளிலும் பார்சல் விற்பனைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
எனவே, அரசால் அறிவிக்கப்படுகின்ற அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பின்பற்றி, “விழித்திருங்கள், விலகி இருங்கள், வீட்டில் இருங்கள்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று மக்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!