ஊரடங்கை மீறியதால் பறிமுதலான வாகனங்கள் திரும்ப ஒப்படைப்பு..

ஊரடங்கு விதிகளை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை காவல்துறையினர் திருப்பி கொடுக்கவுள்ளனர். வாகன உரிமையாளர்கள் ஆவணம் காட்டி, அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களில் சென்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது அவற்றைத் திருப்பிக் கொடுக்க காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து, தமிழக டிஜிபி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஊரடங்கு நடைமுறையின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. எனவே, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட கடந்த 24ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அவற்றின் உரிமையாளர்கள் நாளை முதல் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.


தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, 30 நிமிடத்திற்கு ஒரு முறை 10 பேருக்கு என்று முறை வைத்து வாகனங்கள் ஒப்படைக்கப்படும். தேவைப்பட்டால் அதிகப்படியாக ஒரு மணி வரையும் ஒப்படைக்கப்படும். இந்த நேரத்தில் சமூக இடைவெளியை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வழங்கப்படும்.

கடந்த மாதம் 24ம் தேதி முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட வரிசைப்படி, வாகன உரிமையாளர்களுக்கு எந்த இடத்தில் வந்து வாகனங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற தகவல் அனுப்பப்படும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வாகனங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். வாகன உரிமையாளர்கள் இதற்காக டிரைவிங் லைசென்ஸ் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ், வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ், கடந்த 24ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!