எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எப்போது நடக்கும்.. செங்கோட்டையன் பேட்டி

SSLC exam will be conduted in may, says Minister.

by எஸ். எம். கணபதி, Apr 21, 2020, 10:27 AM IST

தமிழகத்தில் 10ம் வகுப்புத் தேர்வு எப்போது நடைபெறும் என்று மே 3ம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மதிப்பெண்ணைக் கொண்டுதான் மேல்நிலை வகுப்புகளில் பாடத் திட்டம் எடுக்கப்படுகிறது. எனவே, அந்த தேர்வு கண்டிப்பாக நடக்கும். மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஊரடங்கு முடிந்ததும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எப்படி நடத்தலாம் என்பதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். அதன்பிறகு தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும். ஊரடங்கு முடிந்த பிறகு தான் தேர்வு அட்டவணை வெளியிடப்படும். பிளஸ்-2 தேர்வுகள் முடிந்து விட்டன. விடைத்தாள் திருத்தும் பணிகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வைக் குறைந்த காலத்தில் மாணவர்கள் எழுதி முடிப்பதற்கு ஏதுவாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் தேர்வுகள் எழுத அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசித்துத் தேர்வு அட்டவணையை கல்வித்துறை வெளியிடும்.ஊரடங்கு முடிந்ததும், பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆசிரியர்களைக் கொண்டு ஏற்பாடு செய்யப்படும். அதற்கான அட்டவணையும் வெளியிடப்பட இருக்கிறது. 24-ம் தேதி நடந்த பிளஸ்-2 தேர்வை 34,742 பேர் எழுத முடியாமல் போயிருக்கிறது. அவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு தரப்படும்.

தனியார்ப் பள்ளிகளில் ஊரடங்கு காலத்தில் கல்விக் கட்டணத்தைக் கட்டாய வசூல் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளோம். கட்டாய கல்விக் கட்டணம் வசூல் செய்தால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவர்களுக்குக் கல்வி.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

You'r reading எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எப்போது நடக்கும்.. செங்கோட்டையன் பேட்டி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை