தமிழகத்தில் இது வரை 4058 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் 33 பேர் பலியாகியுள்ளனர். 1485 பேர் குணம் அடைந்திருக்கிறார்கள்.தமிழகம் முழுவதும் நேற்றும்(மே 5) 508 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4058 ஆக உயர்ந்துள்ளது. தமிழக அரசு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, புதிதாகப் பாதித்த 508 பேரில் 353ஆண்கள், 169 பெண்கள், ஒருவர் திருநங்கை.
கொரோனா பரிசோதனை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 11,702 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் ஒரு லட்சத்து 69,191 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 279 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 2003 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 33 ஆனது.
இந்நிலையில், நேற்று மட்டும் செங்கல்பட்டில் 38 பேர், கடலூர் 68, திண்டுக்கல் 7, கள்ளக்குறிச்சி 38, நாமக்கல் 15, நீலகிரி 4, திருவள்ளூர் 18, விழுப்புரம் 25, தேனி 5 மற்றும் தர்மபுரி, காஞ்சிபுரம், பெரம்பலூர், சேலம், தென்காசி, நெல்லை, திருச்சி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.