சென்னை: கனிமொழி, வைரமுத்து, வீரமணி ஆகியோர் மீது அடிப்படை ஆதாரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கவிஞர் வைரத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமேடையில் ஆண்டாள் பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை ஏற்பட்டது. இதேபோல், கனிமொழி எம்.பி., பேட்டி ஒன்றில் திருப்பதியில் பாதுகாப்புக்காக இருக்கும் பணியாளர்கள், உரிமைகள் குறித்து பேட்டி அளித்தார். இதுவும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும், திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கி.வீரமணி, ராமாயணம் மனு நீதியை கொளுத்த வேண்டும் என்று பேசினார். இந்த மூன்று கருத்துக்களும் அரசியல் வாதிகள், இந்து அமைப்பினர் இடையே கடும் விவாதத்திற்கு உள்ளானது.
இதனால், இம்மூன்று பேருக்கும் எதிராக சிவசேனா கட்சியின் தமிழ் மாநில தலைவர் ராதா கிருஷணன் கடந்த 3ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார்மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கனிமொழி, வைரமுத்து, வீரமணி மீது அடிப்பை ஆதாரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யலாம் என தீர்ப்பு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.