திருவள்ளூரில் 200 பேருக்கு கொரோனா பாதிப்பு.. கோயம்பேட்டிலிருந்து பரவியது..

திருவள்ளூர் மாவட்டத்தில் 200 பேருக்கு கொரோனா பரவியிருப்பதாகவும், கோயம்பேடு மார்க்கெட் மூலம் அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தினமும் சுமார் 400 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த 25ம் தேதிக்கு பிறகுதான் அதிகமான நோய்ப் பரவல் காணப்படுகிறது. காரணம், தமிழக அரசின் குழப்பமான ஊரடங்கிற்குள் ஊரடங்கு அறிவிப்பால், கடந்த 25ம் தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் 50 ஆயிரம் பேர் வரை குவிந்தனர். இதே போல், சென்னையில் திருவான்மியூர் உள்படப் பல சந்தைகளில் மக்கள் கூட்டம், கூட்டமாகக் கூடியிருந்தனர். இதனால் கொரோனா பரவல் அதிகமாகலாம் என்று மறுநாளே பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.


அது உண்மையாகி விட்டது. தமிழகத்தில் நேற்று வரை 6535 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும் 3330 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, கோயம்பேடு மார்க்கெட்டில் தான் அதிகமானோருக்குப் பரவியிருப்பது தெரிய வந்தது. அதே போல், கோயம்பேட்டிலிருந்து சரக்கு வாகனங்களில் வெளி மாவட்டங்களுக்குச் சென்ற வியாபாரிகள், பொது மக்கள் மூலம் கொரோனா பரவியது கண்டறியப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனா பரவியிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 200 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல், சென்னையில் 40 பேருக்கு கோயம்பேடு மூலம் கொரோனா பரவியிருப்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
Tag Clouds