ரஜினிக்கு கிடைத்தது எங்களுக்கு கிடைக்கவில்லை - தமிழிசை வேதனை

ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் வேண்டுமானால் எங்களுக்கு கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், அவருடைய கருத்துக்களை தான்,நாங்களும் சொல்கிறோம் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

முன்னதாக வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், “நான் என் வேலையை ஒழுங்காக செய்து கொண்டிருந்தேன். ஒரு நடிகனாக சரியாக பணி செய்து கொண்டிருந்தேன். ஆனால், நீங்கள் [அரசியல் கட்சிகள்] உங்கள் வேலையைச் சரியாக செய்யவில்லை” என்று கூறியிருந்தார்.

இது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “மக்களை சார்ந்து தான் அரசியல் என்பதை ரஜினிகாந்த் உணர்ந்துள்ளார். அரசியல் கட்சி தலைவர்கள் சரியாக செயல்படவில்லை என்று ரஜினி கூறுவதை நான் ஏற்கவில்லை.

ஏனென்றால் ஒவ்வொரு பிரச்னையையும் வெவ்வேறு விதமாக அணுக வேண்டியுள்ளது. ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் வேண்டுமானால் எங்களுக்கு கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், அவருடைய கருத்துக்களை தான், நாங்களும் மக்களிடம் எடுத்துச் சொல்கிறோம்.

மேலும், புதிதாக கட்சி தொடங்குவோர் தெளிவாக நடைபோடட்டும். பின்னர் மக்கள் எடை போடுவார்கள். தமிழகத்தில் மாற்று சக்தியாக வருவோம் என்று நாங்கள் சொல்கிறோம். யாரை ஆதரிப்பது என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் அதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!