ஜந்துவின் விஷம் எச்.ராஜா மண்டையில் ஊரிக்கிடக்கிறது - துரைமுருகன் அதிரடி

Advertisement

விஷ ஜந்துவின் விஷம் எச்.ராஜா மண்டையில் ஊரிக்கிடக்கிறது. எச்.ராஜாவுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன். இது திரிபூரா அல்ல இது பெரியார் மண் என்று திமுக முதன்மை செயலாளரும், எதிர்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் கூறியுள்ளார்.

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழகமெங்கும் கடும் கண்டங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில், வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், "அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான் என்பார்கள். அது போல தான் எச்.ராஜா பேசி வருகிறார். ஒரு சிலையை உடைப்பதாலோ, தலைவர்களை சுடுவதாலோ அவர்கள் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ந்த லட்சியங்களை யாராலும் அழிக்க முடியாது.

லெனின் சிலையை அகற்றி விடுவதால் அவரின் சித்தாந்தம் பொதுவுடமை கருத்துக்கள் காணாமல் போகும் என்பது பைத்தியக்காரதனம். யாரோ சிலர் வெறி பிடித்தவர்கள், பைத்தியகாரர்கள், குடிகாரர்கள் திரிபுராவில் லெனின் சிலையை உடைத்துள்ளார்கள்.

எதற்காக உடைக்கப்பட்டது என்ற காரணமே தெரியாமல் எச்.ராஜா பேசி வருகிறார். லெனின் சிலை அகற்றியதை நாணயம் உள்ள அரசியல் வாதியாக இருந்தால் எச்.ராஜா கண்டித்திருக்க வேண்டும்.

பெரியாரால் தான் நாங்கள் இன்றைக்கு உயர்ந்து நிற்கிறோம். பூஜை, புனஸ்காரம் மற்றும் புராண இதிகாசத்தின் பெயரால் மக்களை அடிமைபடுத்தி இங்கு ஒரு இனம் வாழ்ந்து வந்தது. அடிமைப்பட்டு வாழ்ந்த மக்களுக்கு அறிவூட்டி மனிதார்களாக்கிய பெருமை பெரியாருக்கு உண்டு. அதனால் இங்கு காவிகளின் எண்ணம் பலிக்காது.

விஷ ஜந்துவின் விஷம் எச்.ராஜா மண்டையில் ஊரிக்கிடக்கிறது. எச்.ராஜாவுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன். இது திரிபூரா அல்ல இது பெரியார் மண். தமிழக அரசியல் கட்சிக்கும் மத்திய அரசுக்கும் சொல்கிறேன் பிரமர் மோடிக்கும் சொல்கிறேன் இப்படிபட்ட வெறிபிடித்தவர்களை வளர விடக்கூடாது. எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற செயல் தலைவர் ஸ்டாலினின் கருத்தை வரவேற்கிறேன் என்றார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>