முஸ்லிம் மக்கள் இன்று ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். கொரோனா ஊரடங்கால் மசூதிகள் மூடப்பட்டிருப்பதால், அவர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.இஸ்லாம் மதத்தின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது முக்கியமான ஒன்றாகும். ரமலான் மாதம் முழுவதும் சூரியன் உதிக்கும் முன்பாக உணவு அருந்தி விட்டு, சூரியன் மறையும் வரை நோன்பு இருப்பார்கள். ரமலான் மாத முடிவில் பிறை தெரிந்ததும் ரமலான் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். நேற்று பிறை தெரிந்ததால் இன்று ரமலான் கொண்டாடப்படும் என்று தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் அயூப் அறிவித்தார்.
இதன்படி, தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையைக் கொண்டாடினர். கொரோனா ஊரடங்கால் திருவல்லிக்கேணி பெரிய மசூதி உள்பட அனைத்து மசூதிகளும் மூடப்பட்டிருப்பதால், இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.
பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள் அனைவரும் ரமலான் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.