சென்னையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
தமிழகத்தில் தினமும் புதிதாக 700, 800 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று(ஜூன்1) மட்டும் புதிதாக 1162 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில்,வெளிமாநிலங்களிலிருந்து வந்த 50 பேரும், மகாராஷ்டிராவில் இருந்து 33 பேர், டெல்லியில் இருந்து 10 பேர்,கேரளாவிலிருந்து 3 பேர் மற்றும் அரியானா, ஆந்திரா, கர்நாடகா, உ.பி, மேற்குவங்கத்தில் இருந்து தலா ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 413 பேரையும் சேர்த்து மொத்தம் 13,170 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 11 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் நேற்று ஒரே நாளில் 967 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 15,770 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை தவிர, செங்கல்பட்டில் 48 பேருக்கும், திருவள்ளூரில் 33 பேருக்கும், விழுப்புரத்தில் 8 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 9 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.