தமிழகத்தில் கொரோனா பலி 307 ஆக அதிகரிப்பு.. 35 ஆயிரம் பேருக்கு பாதிப்பு..

TamilNadu records over 34000 Covid-19 cases.

by எஸ். எம். கணபதி, Jun 10, 2020, 09:42 AM IST

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 34,914 ஆக அதிகரித்துள்ளது. இந்நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் ஊரடங்கு முழுமையாகத் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தினமும் 10 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. தமிழகத்திலும் கடந்த சில நாட்களாகத் தினமும் புதிதாக 1000 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 1649 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவை 36 பேரும் அடக்கம்.


தம்மம் 1, குவைத் 3, மாலத்தீவு 1, ஆந்திரா 2, உ.பி. 1, அசாம் 1, டெல்லி 2, மகாராஷ்டிரா 6, கர்நாடகா 3 என்று வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.தமிழகத்தில் தற்போது 34,914 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. கொரோனாவுக்கு நேற்று 21 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 12,421 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் இது வரையில் 5 லட்சத்து 93189 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் நேற்று 1242 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 24,545 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் நேற்று 158 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2146 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் 1476 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 567 பேருக்கும், திருவண்ணாமலையில் 522 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் 500க்கும் குறைவானவர்களுக்கு நோய் பரவியிருக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே 100க்கும் குறைவானவர்களுக்கு நோய் பாதித்துள்ளது.

You'r reading தமிழகத்தில் கொரோனா பலி 307 ஆக அதிகரிப்பு.. 35 ஆயிரம் பேருக்கு பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை