பதக்கம் வென்ற பளு தூக்கும் ஒலிம்பிக் விளையாட்டு வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் சஞ்சனா ரெட்டி. சில தினங்களுக்கு முன்புதான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான ஸ்கிரிப்ட் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று தனது வீட்டில் மூச்சுப்பேச்சில்லாமல் மயங்கி விழுந்துகிடந்தார்.
அதிக காய்ச்சலும் இருந்தது. இதைக் கவனித்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதுடன் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துக் கண்காணித்து வருகின்றனர்.இது குறித்து கர்ணம் மல்லேஸ்வரி படத்தைத் தயாரிக்கும் கோனா வெங்கட் கூறும் போது,சஞ்சனா ரெட்டி உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் வெளியில் கூறுவதுபோல் அவர் சீரியஸாக இல்லை. சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்து வருகிறார்என்றார்.