Advertisement

ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்..

திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கடந்த வாரம் நாட்கள் முன்பாக உடல் நலக் குறைவு ஏற்பட்டது. கொரோனா பரவிய காலத்தில் 62 வயதான இவருக்கு உடல்நலம் குறைந்ததால், கடந்த 2ம் தேதியன்று குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


உடனடியாக, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.கடந்த 3 நாட்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஜெ.அன்பழகன் இன்று காலை 8 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு இன்று 62வது பிறந்த நாளாகும். அவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், ஜெ.அன்பழகன் மரணத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான திரு.ஜெ.அன்பழகன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க
famous-writer-narumbu-nathan-s-sudden-demise-nellai
பிரபல எழுத்தாளர் நாறும்பூ நாதன் திடீர் மறைவு... நெல்லையில் அதிர்ச்சி
special-law-to-protect-social-welfare-activists
சமூக நல ஆர்வலர்களை பாதுகாக்க தனிசட்டம் - ஆரல்வாய்மொழி சமூக பொது நல இயக்கம் கோரிக்கை
best-speaker-legislative-assembly-ai-rejects-appavu-s-speech
சிறந்த சபநாயகர், சட்டமன்றம் : அப்பாவு பேச்சுக்கு ஏஐ மறுப்பு
tamil-nadu-s-two-language-policy-should-be-followed-by-all-states
தமிழகத்தின் இரு மொழி கொள்கையை அனைத்து மாநிலங்கும் கடைபிடிக்கும் நிலை - நெல்லையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி
oh-my-you-re-the-one-who-fought-with-your-mother-k-n-nehru-creates-a-stir-on-the-banks-of-the-bharani-river
ஏம்பா நீ அன்னைக்கு சண்டை போட்டவன்தானே - பரணி கரையில் கே.என். நேருவால் கலகலப்பு
we-will-expose-evm-fraud-party-members-fighting-for-the-people-petition-the-governor
EVM மோசடியை அம்பலப்படுத்துவோம்... - மக்களுக்காகப் போராடும் கட்சியினர் ஆட்சியரிடம் மனு.
congress-veterans-who-are-swayed-by-the-wealth-of-the-rich-can-apply-for-the-post-online
இணையதளம் வழியாக பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: செல்வப்பெருந்தகை இன்னாவேடிவால் ஆடி போய் கிடக்கும் காங்கிரஸ் பழந் தலைகள்!
actor-vijay-s-y-category-who-has-what-protection-in-india
நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு : இந்தியாவில் யார் யாருக்கு என்ன பாதுகாப்பு?
bjp-is-playing-the-field-with-sengottaiyan-will-aiadmk-be-united
செங்கோட்டையனை வைத்து களம் விளையாடும் பா.ஜ.க : அதிமுக ஒன்று படுமா?
former-sports-minister-ravindranath-attacked-rv-udayakumar
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரே... ஆர்.பி உதயகுமாரை தாக்கிய ரவீந்தரநாத்