மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை படமாக உருவாகும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கிறார் கங்கனா ரனாவத். இப்படத்தை ஏ.எல்.விஜய் டைரக்ட் செய்கிறார். முன்னதாக இவர் ஜான்சி ராணி கதையான மணிகர்ணிகை படத்தில் நடித்தார்.
இதற்கிடையில் அயோத்தி ராமர் கோயில் சம்பவத்தைப் படமாகத் தயாரிக்க உள்ளதாகக் கூறியிருந்தார். அப்படத்துக்கு அபரஜிதா அயோத்தியா எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. விஜயேந்திர பிரசாத் கதை எழுதுகிறார்.அயோத்திய கோயில் கதையை முதலில் தயாரிக்க எண்ணியிருந்தேன். தற்போது நான் நடிக்க வேண்டிய படங்களை முடித்திருப்பதால் இப்படத்தின் டைரக்ஷன் பொறுப்பை நானே ஏற்கிறேன். இப்படம் ஆன்மிகம். அமைதி தவழும் விதமாக இருக்கும் என்றார் கங்கனா.