தமிழ் சனியனா ..? எச்.ராஜாவின் புதிய கருத்தால் மீண்டும் சர்ச்சை

"தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார், அதற்கான ஆதாரங்கள் உள்ளது" என எச்.ராஜா பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்று ஆட்சியை அமைக்கிறது. 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த பாஜக, ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அங்குள்ள லெனின் சிலைகளை அகற்றும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. இதற்கு, நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அவரது பேஸ்புக் கணக்கில், “இன்று திரிபுராவில் லெனின் சிலை.. நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை” என குறிப்பிட்டார். இதற்கு, தமிழ்நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு கட்சி தலைவர்களும் ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இதையடுத்து, எச்.ராஜா தனது கருத்தை நீக்கியதுடன், வருத்தத்தையும் தெரிவித்தார். இருப்பினும் பல்வேறு இடங்களில் எச்.ராஜாவிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த சர்ச்சை கருத்து மறைவதற்குள் மீண்டும் பெரியார் பற்றி கருத்து பேசி புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார் எச்.ராஜா. திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, “தமிழ் மொழியே இருக்கக்கூடாது என்பதற்காக தமிழர் மீது திணிக்கப்பட்டது தான் திராவிடம். தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என்று ஈ.வே.ரா பெரியார் பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளது. இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்து சொல்வதால் தான் வசை பாடுகிறார்கள்” என்றார்.

இந்த கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய உள்ளது. இதற்கு பல தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds