சென்னையில் இன்று மட்டுமே 18 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, சென்னையில் கொரோனா பலி எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்திலேயே தற்போது சென்னையில்தான் கொரோனா அதிகமாகப் பரவி வருகிறது. நேற்று மட்டும் சென்னையில் 1276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் இது வரை 35,556 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. மண்டல வாரியாக கொரோனா பாதிப்பைக் கவனித்தால், ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில்தான் அதிகமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
திருவெற்றியூர் மண்டலத்தில் 1324 பேர், மணலி-503, மாதவரம்-955, தண்டையார்பேட்டை-4549, ராயபுரம்-5626. திரு.வி.க.நகர்-3160, அம்பத்தூர்-1243, அண்ணா நகர்-3636, தேனாம்பேட்டை-4334, கோடம்பாக்கம்-3801, வளசரவாக்கம்-1497, ஆலந்தூர்-736, அடையாறு-2069, பெருங்குடி-684, சோழிங்கநல்லூர்-677 பேர் என்று கொரோனா பாதித்துள்ளது.
சென்னையில் நேற்று வரை கொரோனாவுக்கு 461 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரும், ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேருமாக மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, சென்னையில் மட்டுமே கொரோனாவுக்கு இது வரை 479 ஆக அதிகரித்துள்ளது.