கர்ப்பிணி பெண் உஷா மரணத்திற்கு காரணமான துவாக்குடி காவல் ஆய்வாளர் காமராஜ் ஏற்கனவே பணிபுரிந்த இடத்தில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
கர்ப்பிணி உஷா மரணத்துக்கு காரணமான துவாக்குடி போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் மீது கொலை செய்யும் நோக்கோடு விபத்து ஏற்படுத்துதல் உள்பட 2 பிரிவுகளின் கீழ் மட்டுமே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இவர் சர்ச்சைகளில் சிக்குவது, அத்துமீறுவது புதிதல்ல என்கிறது திருச்சி காவல்துறை வட்டாரங்கள்.கடந்த 2002ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரிந்த காமராஜ், அவசரத் தேவைக்காக விடுப்பு கேட்ட காவலரை அசிங்கமாக திட்டித் தீர்த்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அந்த காவலர், தன்னுடைய துப்பாக்கியை எடுத்து காமராஜை நோக்கி சுட்டுள்ளார். அதில் அவர் தப்பி விட, வேறு ஒரு காவலர் மீது குண்டு பாய்ந்தது. அடுத்து அந்த காவலர் தன்னையே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பிரச்சனையில் நீண்ட காலம் பணி உயர்வு பெறாமல் இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுக்கு முன்பு பணி உயர்வு பெற்ற காமராஜ், திருச்சிக்கு வந்த சோதனையாக மாறுதலாகி வந்தார். மேலும், சம்பவத்தன்று ஆய்வாளர் காமராஜ், குடி போதையில் வாகன சோதனை நடத்தியதாக சொல்லப்படுகிறது.