திருச்செந்தூர் கோவிலில் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்தபோது அதை தடுத்து நிறுத்திய பாஜக பெண் நிர்வாகி ஒருவர் அய்யாக்கண்ணுவின் கண்ணத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்ய வலியுறுத்தி திருச்செந்தூர் முருகன் கோவியில் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தனது ஆதரவாளர்களுடன் துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கி வந்தார்.
அப்போது, அங்கு வந்த பாஜக பெண் நிர்வாரி ஒருவர் கோவிலில் துண்டு பிரசுரங்கள் கொடுக்கக்கூடாது என்றும், அய்யாக்கண்ணு ஒரு ஃபிராடு என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்நேரத்தில், திடீரென அந்த பெண் நிர்வாகி அய்யாக்கண்ணுவின் கண்ணத்தில் அறைந்தார். மேலும், அவர் அணிந்திருந்த செருப்பை எடுத்து காட்டி அய்யாக்கண்ணுவை மிரட்டி உள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பிரச்னை பெரிதாகிய நிலையில், அங்கிருந்த பக்தர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அய்யாக்கண்ணு வழங்கிய துண்டு பிரசுரத்தில் மோதிக்கு எதிரான கருத்து இருப்பதாக பாஜகவை சேர்ந்த பெண் நிர்வாகி தெரிவித்துள்ளார்.