உள்ளாட்சித் துறையில் ஊழலே நடக்கவில்லையா? வேலுமணிக்கு நேரு சவால்..

உள்ளாட்சித் துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை என்று ஒரு விசாரணை ஆணையம் கூறி விட்டால், நான் அரசியலுக்கு முழுக்குப் போட்டு விடுகிறேன். விசாரணைக்கு அமைச்சர் வேலுமணி தயாரா என்று கே.என்.நேரு சவால் விடுத்துள்ளார்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைக் கடுமையாக விமர்சித்து திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வெளியிட்ட அறிக்கை வருமாறு:கொரோனாவிலும் கொள்ளையடிக்கும் ஒரு கேடுகெட்ட முன்னணியான இழிபிறவி ஒன்று இருக்கும் என்றால் அது உள்ளாட்சித் துறை அமைச்சராக வலம் வந்து கொண்டிருக்கும் வேலுமணிதான். ஊழல்கறை படிந்த கைகளுக்குச் சொந்தமான வேலுமணிக்கு திமுக தலைவர் பற்றி விமர்சிக்க எவ்விதத் துப்பும் இல்லை, துளிகூட அருகதையும் இல்லை.

கொள்ளையடித்துத் தன் கஜானாவை நிரப்பவும்- அடித்த பணத்தில் கப்பம் கட்டவும்- அமைச்சர் பதவியில் அமர்ந்து- பிழைப்பு நடத்தும் கேடு கெட்ட பிறவியான வேலுமணி, திமுக தலைவருக்குச் சான்றிதழ் தர என்ன யோக்கியதை இருக்கிறது? கொடுக்கிற கப்பத்திற்கும்- அடிக்கின்ற கொள்ளைக்கும் தற்போது “எடப்பாடியார்” புகழ் பாடட்டும். திமுக தலைவரின் திசைப் பக்கம் திரும்பி நிற்கக் கூட தகுதியில்லாதவர் வேலுமணி.
வேலுமணிக்கு உள்ளபடியே மானம் வெட்கம் இருந்தால் நகராட்சி நிர்வாகத் தலைமைப் பொறியாளர் நியமனக் கோப்புகளையும்- உள்ளாட்சித்துறை அமைச்சரின் ஊழலுக்கு எல்லாம் ஜால்ரா போட்டு இதுவரை அவர் கையெழுத்துப் போட்ட கோப்புகளையும் சி.பி.ஐ. விசாரணைக்குக் கொடுத்து விட்டு- இந்த அறிக்கை விட்டிருக்க வேண்டும். அந்த சுயமரியாதை எல்லாம் வேலுமணிக்கு இல்லை என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் அவர் கோவை ராவணனுக்குக் கால் கழுவினார். அம்மையார் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவிடம் கூழைக் கும்பிடு போட்டு நின்றார். பிறகு டி.டி.வி. தினகரனிடமும் வளைந்து குனிந்து நெளிந்து நின்று வணக்கம் போட்டார். கூவத்தூரில் “கொண்டாட்டம்” நடத்தி இந்த நாடே காறித்துப்பும் செயலில் ஈடுபட்டார்.

உள்ளாட்சித் துறை அமைச்சராக அடித்த கொள்ளைகள் அவரை ரொம்பவே மன நலம் பாதிக்க வைத்திருக்கிறது. அமைச்சர் பதவி போனால் கோவை சிறையா, சென்னைப் புழல் சிறையா- எந்தச் சிறையில் அடைக்கப்படுவோம் என்று வேலுமணிக்கு இப்போது பித்துப் பிடித்தே விட்டது. அதனால்தான் தனது வேட்டி அவிழ்ந்தாலும் பரவாயில்லை- கடைசி வரை கொள்ளையடித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அமைச்சர் பதவியில் தொடருகிறார். மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கிறார். நடராஜன் உயர்நீதிமன்றத்திலேயே வழக்குத் தொடர்ந்து விட்ட பிறகும்- இன்னும் தன் முறைகேட்டை மறைக்கப் படாத பாடுபடுகிறார் வேலுமணி.

ரூ.17 ஆயிரம் கோடித் திட்டத்தினை நிறைவேற்றும் இடத்தில் ஏன் “பணி நீட்டிப்புச் செய்த புகழேந்தியை” அதுவும்- ஏற்கனவே இருந்த ஒரு தலைமைப் பொறியாளர் நடராஜனை மாற்றி விட்டு நியமித்தீர்கள்? சென்னை மாநகராட்சியில் இருந்து பொறியாளரை நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் நியமிக்கக் கூடாது என்று அரசு விதி இருக்கிறது. அந்த விதியை ஏன் மீறினீர்கள்? சென்னை மாநகராட்சியில் 20ம் தேதி பணிநீட்டிப்புக் கோரி மனு கொடுத்து, 21ம் தேதியே மாநகராட்சி ஆணையர் பரிந்துரைத்து- 30ம் தேதியே புகழேந்திக்குப் பணி நீட்டிப்பு வழங்கியது ஏன்? இப்படிப் பணி நீட்டிப்புக் கேட்ட எத்தனை பேருக்கு மின்னல் வேகத்தில் வழங்கப்பட்டுள்ளது? பணி நீட்டிப்பு வழங்கி தலைமைப் பொறியாளர் பதவிக்குப் பதில்- முதன்மை தலைமைப் பொறியாளர் பதவியாகத் தரம் உயர்த்தியும் கொடுத்தது ஏன்? ஒரு பதவியில் இருப்பவர் அதே பதவியில் பணி நீட்டிப்பு செய்யப்படுவது வழக்கம் என்று எங்கள் கழகத் தலைவரே சுட்டிக்காட்டி- இவருக்கு மட்டும் பதவியைத் தரம் உயர்த்திக் கொடுத்தது ஏன் என்று திமுக தலைவர் கேட்டார்.
அதற்குப் பதில் என்ன? ஏற்கனவே நான்கு வருடம் மாநகராட்சியில் பணி நீட்டிப்பு, பிறகு நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் மீண்டும் ஒரு வருடம் பணி நீட்டிப்பு எனப் புகழேந்திக்கு மட்டும் வழங்கியது ஏன்? இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வக்கில்லாத வேலுமணி தன் மனம் போன போக்கில் அறிக்கை விடுவது அவருக்கு அவமானமாக இல்லாமல் இருக்கலாம்- ஆனால் அவர் வகிக்கும் அமைச்சர் பதவிக்குப் பெருத்த அவமானம்.

புகழேந்தி ஒரு “மெக்கானிக்கல் எஞ்சினியர்”. அவர் எப்படி சிவில் பணிகளை- குறிப்பாக சீர்மிகு நகரங்கள் என்று கூறக்கூடிய “ஸ்மார்ட் சிட்டி” பணிகளைக் கவனிக்க முடியும். ஸ்மார்ட் சிட்டி பணிகள் மட்டும் அல்ல- மத்திய அரசின் பல்வேறு திட்டப் பணிகளும் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் நடக்கிறது. அந்தப் பணிகள் பற்றியெல்லாம் வேலுமணி ஏன் வாய் திறக்கவில்லை? மெக்கானிக்கல் எஞ்சினியருக்கும், சிவில் எஞ்சினியருக்கும் கூட வித்தியாசம் தெரியாத ஒரு “கூ முட்டை” உள்ளாட்சித்துறை அமைச்சராக இருப்பது தமிழக அமைச்சரவையின் சாபக்கேடு! கட்டுமானப் பணிகளுக்குத் தொழில் நுட்ப அனுமதி கூட வழங்கத் தகுதியில்லாத புகழேந்தியை மாநகராட்சியில் வைத்து 5000 கோடி ரூபாய் திட்டங்களை நிறைவேற்றியது எப்படி? அதில் அமைச்சர் வேலுமணி செய்த ஊழல் எவ்வளவு? எத்தனை டெண்டர்கள் அமைச்சருக்கு வேண்டியவர்களுக்குப் போனது? ஆன்லைன் டெண்டர் என்கிறார் அமைச்சர் வேலுமணி. அவருக்குத் தைரியம் இருந்தால்- “எந்த ஆன்லைன் டெண்டரிலும் “நிபந்தனைகள்” சேர்ப்பதில்லை- “சான்றிதழ்கள்” தரச் சொல்லி நிபந்தனை வைப்பதில்லை, தகுதியான யாரை வேண்டுமானாலும் ஆன்லைனில் டெண்டர் போட வைத்திருக்கிறோம்.

ஒரு ரூபாய் கூட டெண்டரில் நான் சம்பாதிக்கவில்லை. நான் டெண்டரில் தலையிடுவதே இல்லை” என்று வெளிப்படையாக அறிவித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்கும் ஆண்மை அமைச்சர் வேலுமணிக்கு இருக்கிறதா? அந்த ஆண்மை இல்லையென்றால்- உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் காலகட்டத்தில் விடப்பட்ட டெண்டர்கள் பற்றி எல்லாம்- குறைந்தபட்சம் ஒரு விசாரணை ஆணையம் அமைக்க நான் தயார் என்று அறிவிக்கும் திராணியும், தெம்பும் இருக்கிறதா? அப்படியொரு விசாரணை ஆணையம் அமைத்து- அந்த ஆணையம் உள்ளாட்சித் துறை டெண்டர்களில் முறைகேடே நடக்கவில்லை என்று கூறிவிட்டால்- நான் அரசியலுக்கு முழுக்குப் போட்டு விடுகிறேன்.
“ஊழல் நடந்திருக்கிறது” என்று சொல்லி விட்டால்- வேறு வழக்கு விசாரணை இல்லாமலேயே நான் ஜெயிலுக்குப் போகத் தயார் என்று வேலுமணி அறிவிக்கத் தயாரா?
இவ்வாறு நேரு கேட்டுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!