விபத்தால் நிலைகுலைந்த குடும்பம்.. உதவிக்காக ஏங்கும் பெண்!

by Sasitharan, Aug 8, 2020, 14:34 PM IST

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஜோதி லட்சுமி. இவரது கணவர் பெயர் நாகராஜன். சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. நாகராஜன் அந்தப் பகுதியில் லோடுமேன் வேலை செய்துவந்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன் நாகராஜன் வேலைக்குச் செல்லும்போது எதிரே வந்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில், நாகராஜனுக்கு உடம்பில் பலத்த அடி ஏற்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

விபத்தில் அவரது இடுப்பு பகுதி முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் அவரால் எழுந்த நடக்கவோ, உட்காரவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.படுத்த படுக்கையாக இருக்கிறார். இதற்கிடையே, குடும்பத்தில் நாகராஜன் ஒருவர் மட்டுமே சம்பாதித்து வந்ததால், அவரது குடும்பம் தற்போது மோசமான சூழ்நிலையில் உள்ளது. உணவுக்குக் கூட கஷ்டப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, ஜோதி லட்சுமி தனது குடும்பத்தின் நிலையை வீடியோவில் பேசி உதவி கேட்டுள்ளார். ``என் கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூட எங்களிடம் பணம் இல்லை" என வேதனை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஜோதி லட்சுமியின் குடும்பத்துக்கு உதவ `தி சப் எடிட்டர்' தளம் மூலம் உதவச் சிலர் முன்வந்துள்ளனர். ஜோதிலட்சுமி குடும்பத்தைப் பற்றி அறிந்தவர்கள் எங்கள் தளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

READ MORE ABOUT :

More Tamilnadu News

அதிகம் படித்தவை