ஏற்கனவே அறிவித்தபடி காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டர் நிறுவனங்களின் அதிக கட்டணத்தை எதிர்த்து கடந்த 1ம் தேதி முதல் தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், புதுப்படங்கள் ஏதும் ரிலீஸ் செய்யப்படவில்லை.
தொடர்ந்து, வரும் 16ம் தேதி முதல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் எனவும், சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் எதுவும் நடைப்பெறாது எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், “ ஏற்கனவே அறிவித்தபடி காலவரையற்ற போராட்டம் தொடரும். வரும் 16ம் தேதி முதல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும். மேலும், 23ம் தேதி முதல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும்” என கூறப்பட்டுள்ளது.