இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர் விகிதத்தில் டெல்லி, தமிழ்நாடு முன்னிலையில் உள்ளன. இந்தியாவில் இது வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே சமயம், 25 லட்சத்து 23,772 பேர் வரை நோயில் இருந்து குணம் அடைந்துள்ளார்கள். தற்போது 7 லட்சத்து 25,917 பேர் சிகிச்சையில் உள்ளனர். குணம் அடைந்தவர்களின் விகிதத்தில் டெல்லி 90 சதவீதம், தமிழ்நாடு 85, பீகார் 83.8, டையூ டாமன் 82.6, ஹரியானா 82.1, குஜராத் 80.2, ராஜஸ்தான் 79.3, அசாம் 79.1, மேற்கு வங்கம் 79.1, கேரளா 77.2 சதவீதம் என்ற அளவில் முன்னணியில் உள்ளன.
மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் இந்த விகிதம் குறைவாக உள்ளது.அதே போல், நாடு முழுவதும் கொரோனா பாதித்து இது வரை பலியானவர் எண்ணிக்கை 60,432 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை அசாம், கேரளாவில் மிகக் குறைவாக உள்ளன. அசாம் 0.27 சதவீதம், கேரளா 0.39, பீகார் 0.42, ஒடிசா 0.51, தெலங்கானா 0.7, திரிபுரா 0.95, கோவா 1.08, ஜார்கண்ட் 1.09 சதவீதமாக இறப்பு விகிதம் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை இது 1.78 சதவீதமாக உள்ளது.