பாலிவுட்டில் போதை பார்ட்டி நடத்தும் நடிகர். நடிகைகள்.. பிரபல ஹீரோயின் கொளுத்தி போட்ட புதிய வெடி குண்டால் ஆடிப்போன பிரபலங்கள்..

Advertisement

கடந்த 2 ஆண்டுக்கு முன் தெலுங்கு திரையுலகில் போதை மருந்து கலாச்சாரம் நடிகர், நடிகைகளுக்கு மத்தியில் இருப்பதாகக் கூறி தெலுங்கு நடிகர்கள் நவ்தீப், ரவிதேஜா, நடிகை முமைத்கான் உள்ளிட்ட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. போதை தடுப்பு போலீசார் பல ஸ்டார்களை அழைத்து விசாரணை நடத்தினர். போதை மருந்து விற்ற நைஜீரியா வாலிபரையும் கைது செய்தனர். கடைசியில் அந்த புகார் பிசிபிசுத்துப்போனது. தற்போது சுஷாந்த் தற்கொலை வழக்கில் போதை மருந்து கலாச்சாரம் அம்பலமாகி இருக்கிறது.

சுஷாந்துக்கு டீ யில் ஆபத்தான போதை மருந்து கலந்து கொடுத்து அவர் மரணத்துக்குக் காரணமாக இருந்ததாக நடிகை ரியா மீது புகார் எழுந்துள்ளது. அவர் மீது போதை மருந்து தடுப்பு பிரிவினர் போதை மருந்து தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பாலிவுட்டில் போதை மருந்து கலாச்சாரம் பரவி வருவது பற்றி நடிகை கங்கனா ரனாவத் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

அவர் கூறியது:பாலிவுட்டில் நடக்கும் பிரபல பார்ட்ட்டிகளில் போதை மருந்து பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கொக்கைன் பயன்படுத்தப்படுகிறது,விலை உயர்ந்த போதை மருந்தான இது பெரிய ஸ்டார்களின் பார்ட்டிகளில் இலவசமாகவே வழங்கப்படுகிறது. எம்.டி.எம்.ஏ படிகங்கள் தண்ணீரில் கலக்கப்பட்டு, உங்களுக்குத் தெரியாமல் அது செலுத்தப்படும். சில பார்ட்டிகளில் போதை கும்பல் கூட்டத்தை நான் பார்த்திருக்கிறேன். நான் சிறுவயது பெண்ணாக இருந்தபோது எனக்குத் தெரியாமல் வழிகாட்டியாக இருந்தவர் எனக்கு கூல்டிரிங்க்ஸில் போதை மருந்து கலந்து தந்து விடுவார்.
போதைப்பொருள் தடுப்பு போலீஸாருக்கு உதவ நான் தயார். ஆனால் இது மிகவும் ஆபத்தான வேலை.இதனால் என் தொழிலுக்கு மட்டுமல்ல என் உயிருக்கே கூட ஆபத்து நேரலாம். எனக்குப் பாதுகாப்பு தந்தால் இதுபற்றி விவரங்களை வெளியிடுவேன்.

சுஷாந்துக்கு சில பயங்கரமான உண்மைகள் தெரிந்ததாலேயே அவர் கொல்லப்பட்டார். போதைப் பொருள் விவகாரத்தில் பாலிவுட்டில் போலீசார் நடவடிக்கை எடுத்தால் பல பிரபலங்கள் சிறையில் இருப்பார்கள். பாலிவுட் என்ற சாக்கடையைத் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி சுத்தம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு கங்கனா கூறி புதிய வெடிகுண்டைத் தூக்கிப்போட்டிருக்கிறார். இது பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பதுடன் பல பிரபலங்கள் ஆடிப்போய் உள்ளனர். ஏற்கனவே சுஷாந்த் வழக்கில் வாரிசு நடிகைகள் அவரை அவமானப்படுத்தியது தற்கொலைக்குக் காரணம் என கங்கனா தெரிவித்துப் பல வாரிசு நடிகர் நடிகைளை ஓட விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் வெளியிட்டுள்ள போதை பார்ட்டி விவகாரத்தில் எந்தெந்த பிரபலங்கள் சிக்குவார் என்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>