கொரானோ நோயின் தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி , கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்நிலையில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களை தவிர மற்ற அனைவருக்கும் செமஸ்டர் தேர்வில் தேர்ச்சி பெற்றாதாக யுஜிசி மற்றும் ஏஐசிடியி மூலம் அறிவிக்கப்பட்டது. இதனால் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு அதன் இறுதி தரப்பு வாதம் இன்று நடைபெற்றது.
இதில் உச்சநீதிமன்றம் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என்பதனை ஏற்க முடியாது. வேண்டுமானால் தேர்வுக்கான கால அளவை நீட்டித்து கொள்ளுங்கள் . கால அவகாசம் தொடர்பான கருத்துக்களை யுஜிசி மற்றும் ஏஐசிடியி யிடம் மாநில அரசுகள் தெரிவித்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.