திமுக தலைவராகப் பொறுப்பேற்று 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்.தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள திமுகவில் சுமார் 50 ஆண்டுக் காலம் தலைவராகக் கருணாநிதி இருந்தார். அவருக்குக் கடந்த 2017ல் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். தலைவருக்கான அதிகாரம் அவருக்கு அளிக்கப்பட்டது.
கடந்த 2018ம் ஆண்டில் கருணாநிதி மறைந்தார். அதன்பிறகு, அந்த ஆண்டு ஆக.28ம் தேதியன்று திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். இந்நிலையில், அவர் தலைவராகப் பதவியேற்று 2 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, திமுக தலைவர் ஸ்டாலின், தனது வீட்டில் தந்தை கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினார். தொடர்ந்து அவர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், மூத்த நிர்வாகிகள் ஆர்.எஸ்.பாரதி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.