கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் பொருளாதார ரீதியாக சில தளர்வுகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.பள்ளி , கல்லூரி , தியேட்டர் மற்றும் பார் போன்றவற்றைத் தவிர்த்து மற்ற அனைத்து வகையான நிறுவனங்கள் மற்றும் தொழில்களை இயக்கலாம் என்பதாகும் .இந்த நிலையில் வரும் செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படுவது கனரக வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 48 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது அவற்றில் 20 சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு ஏற்ப 5 முதல் 15 வரை கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஓமலூர் , வீரசோழபுரம் , மேட்டுப்பட்டி (சேலம் ) , விக்கிரவாண்டி ( விழுப்புரம்) , சமயபுரம் ( திருச்சி ) , பனையம் ( தருமபுரி ) போன்றவைகளும் அடங்கும்.