மாணவர்களுக்கான துணைத்தேர்வு... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அரசு...! துணைத்தேர்விற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Publication of guidelines for sub-selection

by Loganathan, Aug 29, 2020, 14:53 PM IST

கொரோனா தொற்றின் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு , பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.இந்நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடி துணை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் அதற்கான நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்புக்கான துணைத் தேர்வு செப்டம்பர் 21 முதல் 26 வரை தொடர்ச்சியாக நடைபெறும்.

பிளஸ் 1 துணைத் தேர்வு செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 7 வரை நடைபெறும்.

பிளஸ் 2 துணைத் தேர்வு செப்டம்பர் 21 முதல் 28 வரை நடைபெறும்.

இதுகுறித்த அரசாணையைத் தலைமை செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ளார் அதில் தேர்வு வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன அதன்படி அறையின் அளவு 400 சதுர அடிக்குக் குறைவாக இருந்தால் 10 மாணவர்களும் , 400 சதுர அடிக்கு மேல் இருந்தால் 20 மாணவர்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றித் தேர்வு எழுதலாம்.

You'r reading மாணவர்களுக்கான துணைத்தேர்வு... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அரசு...! துணைத்தேர்விற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை