டி.டி.வி. தினகரன், தனது இயக்கத்தின் பெயரை அறிவித்தார்.
அதன்படி, “அம்மா மக்கள் முனேற்ற கழகம்” என்ற பெயரையும்; கறுப்பு-வெள்ளை- சிவப்பு கொடியின் மத்தியில் ஜெயலலிதா உருவம் பதித்த கொடியையும் அறிமுகம் செய்துவைத்தார். அப்போது, விழா திடலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார்.
மதுரை மாவட்டம், மேலூரில் புதிய அமைப்பின் தொடக்கவிழா நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அப்போது பேசிய தினகரன், “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” இனி எந்த தேர்தல் வந்தாலும் இதே பெயருடன், இந்த கொடியுடன் மட்டுமே செயல்படும்” என்றார். மேலும், “இந்த இயக்கம் தமிழக மக்கள் விரும்பாத எந்தத் திட்டதையும் தமிழகத்தில் செயல்படுத்த அனுமதிக்காது” என்றார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் டி.டி.வி. தினகரன். இந்த சின்னத்தைப் பயன்படுத்திக் கொள்ள டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியது. என்பது குறிப்பிடத்தக்கது.