கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காகத் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்தது. இன்று முதல் பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது. சென்னையில் 161 நாட்களுக்குப் பின்னர் இன்று பஸ்கள் ஓடின.
இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னையில் நிருபர்களிடம் கூறியது: தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி மாவட்ட எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை பஸ்கள் இயக்கப்படும். அங்கிருந்து அடுத்த மாவட்டத்திற்குச் செல்ல விரும்பும் பணிகளுக்காக மாவட்ட எல்லையிலுள்ள நிறுத்தம் வரை பஸ்கள் செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரவு 9 மணி வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படும். நோய் அறிகுறி இருந்தால் மட்டுமே டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். இரவு 9 மணி வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படும். அரசு பஸ்களில் பழைய மாதாந்திர பாஸ் வரும் 15ம் தேதி வரை செல்லும்.
பஸ் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.