சுரேஷ் ரெய்னா தனது குடும்ப காரணங்களால் இந்த சீசனின் ஐபில்2020 ல் இருந்து விலகியுள்ளார். மேலும் அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியா திரும்பியுள்ளார். ரெய்னாவின் மாமாவைக் கொள்ளையர்கள் கொன்றுவிட்டார்கள். இதனாலே அவர் இந்தியா திரும்பியுள்ளார்.பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டின் தரியால் கிராமத்தில் ரெய்னாவின் தந்தையின் சகோதரி அதாவது ரெய்னாவின் அத்தை ஆஷா தேவி குடும்பத்தினர் தங்கியிருந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் ஆஷா தேவி குடும்பத்தினர் மீது மர்மநபர்கள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். இதில் ரெய்னாவின் மாமா அசோக் குமார் இறந்துவிட்டார். அவரின் அத்தை ஆஷா தேவியோ உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்துக்குக் காரணமான குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
இதற்கிடையே, இந்த கொலை குறித்து ரெய்னா தற்போது டிவிட்டரில் ஒரு பதிவிட்டிருக்கிறார். ``எங்கள் குடும்பத்துக்கு நடந்தது கொடூரத்தின் உச்சம். என் மாமா கொலை செய்யப்பட்டார், அவரின் இரண்டு மகன்களுக்கும் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துவிட்டார். என் அத்தை வெண்ட்டிலேட்டர் உதவியுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்
இவ்வளவு நடந்துவிட்டது. ஆனால் இப்போது வரை அன்று இரவு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் தெரியவில்லை. பஞ்சாப் போலீஸார் இந்த விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கொடூரமான காரியத்தைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து, தண்டிக்க வேண்டும். இவர்களை விட்டுவிட்டால் பலபேருக்கு இதுபோன்ற கொடூரங்கள் நிகழக் கூடும்" எனக் கூறியுள்ளார்.