”கட்சியின் தலைமை முடிவை ஏற்கிறேன்” - அரசியல் பயணம் குறித்து விஜய் வசந்த்...!

by Loganathan, Sep 4, 2020, 15:11 PM IST

தொழிலதிபரும் , கன்னியாகுமரி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் அவர்கள் கடந்த மாதம் ஆகஸ்ட் 28 ல் மரணம் அடைந்தார். அவர் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நிமோனியா நோயின் தாக்கத்தால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது இறுதி ஊர்வலம் ஆகஸ்ட் 30 அன்று அவரது சொந்த ஊரில் நடைபெற்றது.அவரின் 7ம் நாள் துக்க நிகழ்வானது நேற்று நடைபெற்றது அதில் பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் கன்னியாகுமரியில் இருந்து நினைவகம் வரை நடைபெற்றது.

பின்னர் அவரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் அவர்களிடம் சில கேள்விகள் முன் வைக்கப்பட்டது. அதில் அவரின் தந்தை இறப்பிற்கு பின் இவர் அரசியல் பயணத்தை தொடருவரா என்று கேள்வி பல்வேறு தரப்பினர் இடையே எழுந்தது .இதற்கு விடை அளித்த விஜய் வசந்த் அவர்கள் எனது தந்தை அவரின் பொறுப்புகளை மிகச் சிறப்பாகச் செய்தார் . மேலும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்தவிதமான முடிவுகளும் இன்னும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.

தந்தை நண்பர்கள் பலர் என்னைத் தேர்தலில் போட்டியிட அறிவுறித்தனர் எனினும் நான் என் தந்தையை மதிப்பவன் எனவே கட்சியின் தலைமை முடிவை ஏற்பதாகவும். அவர்கள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் அரசியலில் பயணிக்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.


More Tamilnadu News

அதிகம் படித்தவை