தமிழகத்தில் 6ம் தேதி முதல் அரசு விரைவு பேருந்துகள் இயக்கம்

State express transport to start bus services from 6th september

by Nishanth, Sep 4, 2020, 20:12 PM IST

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக பொதுப் போக்குவரத்து இன்றி மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் ஊரடங்கு சட்ட நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் 6ம் தேதி இரவு முதல் 400 அரசு விரைவு பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருப்பூர், தஞ்சாவூர், வேலூர் உள்பட முக்கிய நகரங்களுக்கு விரைவு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தற்போதைக்கு குளிர்சாதன வசதியுள்ள பஸ்கள் இயக்கப்பட மாட்டாது. 6ம் தேதி இரவு முதல் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வழக்கமான விரைவு பஸ் போக்குவரத்து சேவை தொடங்கும். வெளிமாநிலங்களுக்கு பஸ்களை இயக்குவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அரசு விரைவு மற்றும் சொகுசு பஸ்களில் 60 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா நோய் அறிகுறி இருப்பவர்களுக்கு அனுமதி இல்லை. பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டாலும் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்று விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 5ம் தேதி முதல் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

You'r reading தமிழகத்தில் 6ம் தேதி முதல் அரசு விரைவு பேருந்துகள் இயக்கம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை