சிங்கம் `ஹீரோ நினைப்பில் வேலை செய்யாதீர்கள்.. போலீஸுக்கு மோடி அட்வைஸ்!

by Sasitharan, Sep 4, 2020, 20:02 PM IST

ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்களிடையே காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாடினார். அப்போது, ``காக்கியின் மதிப்பை ஒரு போதும் இழக்கக் கூடாது. சிங்கம் படத்தில் நேர்மை தவறாத மற்றும் கடமையில் இருந்து விலகாத காவல் அதிகாரியாக நாயகன் வேடம் அமைந்திருக்கும். அப்படியான படங்களை பார்த்துவிட்டு, புதிதாக காவல்துறைப் பணிக்கு சேருபவர்கள், தங்களைக் கண்டு ஒவ்வொருவரும் பயப்பட வேண்டும் என நினைகின்றனர்.

மேலும் தங்களை பற்றி பெரிய அளவில் நினைத்துக் கொண்டு சிலர் செயல்பட்டு உண்மையான போலீஸ் பணி உதாசீனப்படுத்தப்படுத்துகின்றனர். அப்படி இருக்காமல் பணியாற்றுங்கள். மக்களோடு காவல்துறை அதிகாரிகள் எளிமையாக பழக வேண்டும். காக்கி உடை அணிந்திருப்பதை பெருமையானதாக கருத வேண்டும். அதற்குரிய மரியாதையை குறைக்கும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் காவல்துறையினர் ஆற்றிய பணிக்கு பாராட்டுத் தெரிவித்து கொள்கிறேன். போலீசாரின் இந்த மனிதநேய சேவை மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். காவல்துறையினர் தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்க யோகா, பாராயணம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.


More India News

அதிகம் படித்தவை