வாழ்வு மட்டுமல்ல, அவரின் மரணமும் நமக்கு பாடம்தான்.. வசந்தகுமாருக்காக உருகிய ஸ்டாலின்!

by Sasitharan, Sep 11, 2020, 18:17 PM IST

காங்கிரஸ் கட்சியின் எம்பியும், பிரபல தொழிலபதிருமான ஹெச்.வசந்தகுமார் சில நாட்களுக்கு கொரோனா காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது மறைவுக்கு அவரின் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமாருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காணொலி மூலம் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, ``வசந்தகுமாரின் வாழ்வு எப்படி நமக்கு ஒரு பாடமோ, அதேபோல் அவரின் மரணமும் நமக்கு ஒரு பாடம் தான். கொரோனாவுக்கு இதுவரை தடுப்பூசியோ மருந்தோ கண்டுபிடிக்கவில்லை என்பதால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா பரவலுக்கு, கை கழுவ வேண்டும் என நமக்கு அறிவுரை சொன்ன மத்திய - மாநில அரசுகள், இப்போது நாட்டையே கை கழுவி விட்டன" என்று ஸ்டாலின் பேசினார்.

READ MORE ABOUT :

More Tamilnadu News

அதிகம் படித்தவை