பயனாளர்களுக்கே தெரியாமல் வீடு கட்டி ஊழல்.. அதிர்ச்சியை கிளப்பும் டிடிவியின் குற்றச்சாட்டு!

by Sasitharan, Sep 12, 2020, 18:05 PM IST

விவசாயிகளுக்கான மத்திய அரசின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை கிளப்பி வரும் நிலையில், இப்போது பிரதமரின் வீடு கட்டித்தரும் திட்டத்திலும் தமிழகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்திருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறி புது குண்டை போட்டுள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பதிவில், ``பிரதமரின் வேளாண்மை நிதி உதவி திட்டத்தைப் போல பிரதமரின் வீடு கட்டித்தரும் திட்டத்திலும் (Pradhan Mantri Awas Yojana) தமிழகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக அடுத்தடுத்து செய்திகளாக வெளிவருகின்றன.

உயிரோடு இருப்பவர்களின் பெயரில் அவர்களுக்கே தெரியாமல் வீடு கட்டிக் கொடுத்ததாக பணம் கையாடல் செய்ததாக மட்டுமின்றி, இறந்தவர்களின் பெயராலும் இந்த மோசடி நிகழ்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. ஏழை, எளிய மக்களின் நலனுக்கான இத்தகைய திட்டங்களில் மனசாட்சியின்றி செய்யப்பட்டுள்ள முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்துவதையும், அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதையும் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தாமதமின்றி உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

READ MORE ABOUT :

More Tamilnadu News

அதிகம் படித்தவை