குரங்கணி தீ விபத்தில் மேலும் ஒருவர் மரணம்! பலி எண்ணிக்கை உயர்வால் வேதனை

Advertisement

குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த 11ம் தேதி மாலை தீ விபத்து ஏற்பட்டது. இதற்கிடையே, மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேரும் இந்த தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர். இந்த துயர சம்பவத்தில், 9 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

மேலும், மருத்துவமனையில் 90 சதவீதம் காயங்களுடன் மற்றவர்களை அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில், அடுத்தடுத்த நாட்களில் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதற்கிடையில், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, திருப்பூரை சேர்ந்த சக்திகலா மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேலம் எடப்பாடியைச் சேர்ந்த தேவி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். குரங்கணி காட்டுத் தீ விபத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக இருந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஈரோட்டை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். தீ விபத்தில் மரணம் அடைந்தவர்களின் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சிகிச்சை பெற்றுவரும் நபர்களின் உறவினர்கள் கவலையில் ஆழ்ந்து வருகின்றனர்.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>