தமிழ் ENGAL UYIR... வைரலாகும் ஸ்டாலினின் டி-சர்ட் போட்டோ!

by Sasitharan, Sep 16, 2020, 16:02 PM IST

சமீபகாலமாகவே தமிழகத்தில் இந்தி திணிப்பு போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இளம் தலைமுறைகள் நவீனத்தைப் புகுத்தி டி-ஷர்ட் மூலம் `இந்தி தெரியாது போடா', `தமிழ் பேசும் இந்தியன்' என்ற வாசகங்களை ஏந்தியபடி இந்தி திணிப்பை எதிர்த்தனர். இது இந்திய அளவில் ட்ரெண்டானது. இந்நிலையில் இதைப் பின்பற்றி வெளியாகியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. `தமிழ் எங்கள் உயிர்' என்ற வாசகத்துடன் அடங்கிய டி-சர்ட்டை ஸ்டாலின் அணிந்திருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சமீபகாலமாக சைக்கிளிங் செல்லும் ஸ்டாலின் கடந்த முறை சைக்கிளிங் செல்லும்போது இந்த டி-ஷர்ட்டை அணிந்திருக்கிறார். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் புகைப்படங்கள் பின்னால், `இருக்கத் தமிழ் எங்கள் உயிர்' என்ற வாசகத்தில் தமிழ் என்ற வார்த்தை தமிழிலும், `எங்கள் உயிர்' ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டுள்ளது. இதனை ட்ரெண்ட் செய்து வரும் திமுகவினர், மத்திய அரசின் மும்மொழி கொள்கையை எதிர்த்தும், இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் ஸ்டாலின் இவ்வாறு டி-சர்ட் அணிந்து பிரச்சாரம் செய்கிறார் என்று கூறி வருகின்றனர்.


More Tamilnadu News

அதிகம் படித்தவை