மாணவர்களுக்கான ஓவிய போட்டி!

by Loganathan, Sep 16, 2020, 16:06 PM IST

இந்திய அஞ்சல் துறை சார்பில் நடத்தப்படும் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியில் பங்கேற்கச் செப்டம்பர் 30க்குள் விண்ணப்பிக்கலாம்.கரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றைத் தடுப்பது குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'கோவிட்-19' என்ற தலைப்பில் ஓவியப் போட்டியை இந்திய அஞ்சல் துறை நடத்துகிறது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அஞ்சல்தலை சேகரிப்பு மையம் நடத்தும் இப்போட்டியில், பங்கேற்க விருப்பும் மாணவர்கள் 8 முதல் 14 வயதுக்குள் இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்க ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். இதை மின்னணு மணியார்டர் மூலம் கண்காணிப்பாளர் பெயரிலும் அல்லது காசோலை மூலம் தலைமை அஞ்சல் துறைத் தலைவர் பெயரிலும் அனுப்பவேண்டும்.

ஓவியங்கள் வரையப்பட்ட தாளின் பின்பக்கத்தில் மாணவர் பெயர், பள்ளியின் பெயர், வயது, வீட்டு முகவரி, தொலைப்பேசி எண்ணை பென்சிலில் எழுத வேண்டும்.போட்டியில் வெல்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 2,500, 2.ம் பரிசாக ரூ.1,500, 3.ம் பரிசாக ரூ.1,000 வாங்கப்படும். தேர்வாகும் ஓவியங்கள் அஞ்சல் துறை வெளியிடும் சிறப்பு அஞ்சல் உறைகளில் அச்சிடப்பட்டு மாணவர்களுக்குப் பெருமை சேர்க்கப்படும்.

இப்போட்டியில் பங்கேற்க வரும் 30.ம் தேதி கடைசி நாள். ஓவியங்கள் விரைவு தாபல் மூலம், கண்காணிப்பாளர், அஞ்சல் தலை சேகரிப்பு மையம். அண்ணா சாலை தலைமை அஞ்சல் அலுவலகம், சென்னை 2 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-28543199 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

READ MORE ABOUT :

More Special article News

அதிகம் படித்தவை