திடீர் மாரடைப்பு... நாம் தமிழர் கட்சியின் சாகுல் ஹமீது மரணம்!

nam tamilar party shakul hameed died

by Sasitharan, Sep 19, 2020, 22:18 PM IST

கொரோனா தமிழகத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இந்த கொரோனாவால் பலியாகி வருகின்றனர். இதற்கிடையே, கொரோனாவின் காரணமாக மற்றுமொரு இறப்பு தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது. இவர், சமீபத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக வேளச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இதனிடையே, சில மணி நேரங்களுக்கு முன்பு, திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இது நாம் தமிழர் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி மறைவின் காரணமாக திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர் சாகுல் ஹமீது. நாம் தமிழர் கட்சியின் அரசியல் செயல்பாடுகளில் தொடக்கம் முதலே தீவிரமாகச் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Tamilnadu News

அதிகம் படித்தவை