இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லாத் தன்மையால் ஏற்ற இறக்கங்கள் உடன் இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஆனால் கடந்த வாரம் இந்தியப் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தோடு முடிந்தது . இருப்பினும் தங்கத்தின் விலையானது நேற்றைய விலையை விடச் சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4958 க்கு விற்பனையானது . ஆனால் இன்று கிராமிற்கு 24 ரூபாய் குறைந்து , கிராமானது 4934 க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் -4934
8 கிராம் ( 1 சவரன் ) - 39472
தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடனே உள்ளது.நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5206 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 24 குறைந்து , கிராமானது ரூபாய் 5182 க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம் (24k)
1 கிராம் - 5182
8 கிராம் - 41456
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையானது எந்தவித மாற்றமும் இல்லாமல் , கிராம் 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 70000 க்கு விற்பனையாகிறது.