இயக்குனர் மீது பாலியல் புகார் சொன்ன நடிகையை கூட்டாக தாக்கிய 2 மனைவிகள், .. டைரக்டருக்கு இப்படியொரு சப்போர்ட்டா..?!

Advertisement

இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தவர் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். இவர் மீது நடிகை பாயல் கோஷ் என்பவர் பாலியல் புகார் கூறி இருந்தார். பட வாய்ப்பு கேட்கச் சென்றபோது அவர் தனி அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். திடீரென்று ஆபாச வீடியோவை டிவியில் ஓட விட்டார். பிறகு என்னைப் பலவந்தப்படுத்தினார். அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து நான் தப்பி ஓடி வந்தேன் என்றார்.

அனுராக் காஷ்யப் பாலிவுட்டில் பிரபலமான இயக்குனர். அவரது இயக்கத்தில் பல பிரபல ஹீரோயின்கள் நடிக்கக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் மீது நடிகை பாயல் பாலியல் புகார் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருடன் பழகிய நடிகைகள் அனுராக் காஷ்யாபுக்கு நற்சான்றிதழ் அளித்திருக்கின்றனர். நடிகை ராதிகா ஆப்தே, டாப்ஸி உள்ளிட்ட பல நடிகைகள் அனுராக்கிற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

இவர்கள் போதாதென்று அனுராகிற்கு ஆதரவாக அவரது முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ் அதிரடியாகக் கருத்து கூறி அனுராக் கை உயர்ந்த இடத்துக்குத் தூக்கி வைத்திருக்கிறார். அனுராக் எங்கெல்லாம் அநியாயம் நடக்கிறதோ அதை துணிச்சலாக தட்டிக் கேட்பவர். பெண்களின் அதிகாரத்துக்குத் தொடர்ந்து குரல் கொடுப்பவர். சமுதாயத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பான இடம் கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவர். மற்றவர்களை வெறுக்கச் செலவிடும் நேரத்தை ஆக்கப் பூர்வாக செலவிடுங்கள். புகார் கூறிய நடிகை சீப்பான ஸ்டன்ட் அடித்திருக்கிறார் எனத் தெரிவித்திருக்கிறார்.
பாயல் கோஷ் புகார் குறித்து அனுராக் பதில் அளித்திருக்கிறார்.

அதில், தனிப் பட்ட முறையில் நான் சந்திக்கும் பெண்கள், என் இரண்டு மனைவிகள், என்னுடன் பணிபுரிந்த நடிகைகள் யாராக இருந்தாலும் இதுபோன்ற செயல்களை நான் ஆதரிப்பதில்லை. அப்படி எங்காவது நடந்தால் அதைப் பொறுத்துக்கொள்ளவும் மாட்டேன். என் மீது கூறப்பட்ட புகாரில் எவ்வளவு உண்மை இருக்கிறது எவ்வளவு பொய் இருக்கிறது என்பது எனக்குத் தெரிகிறது என்றார்.நடிகர், இயக்குனர்கள் மீது இதுவரை நடிகைகள் பாலியல் புகார் கூறியபோது சக நடிகைகள் புகார் கூறிய நடிகைகளுக்குத் தான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அனுராக் விஷயத்தில் அவர் மீது புகார் கூறிய நடிகையை மற்ற நடிகைகள் வறுத்தெடுத்திருப்பது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>